Posts

விஷாதயோகம் - வியப்புரை

Image
யோகிராம்சுரத்குமார் வியப்புரை     உத்தவ கீதை என்று ஒன்று உண்டு. பாகவதத்தின் இறுதிப் பகுதியில் உத்தவரும் கிருஷ்ணரும் பேசிக்கொள்ளும் நீண்ட நெடும் உரையாடல் பகுதி இது . இதன் சிறப்பு என்னவெனில் , பகவான் கிருஷ்ணர் தன்னை முழுவதும் வெளிப்படுத்தியது உத்தவர் என்கிற உத்தவசுவாமியிடம்தான் . ஏனெனில் , கீதை முழுவதும் கிருஷ்ணன் யோகியாகவே வலம் வருவான். அர்ஜுனனை முன்னிலையாகக் கொண்டு சகல ஆன்மிக மார்க்கங்களையும் தரிசிக்கச் செய்வான். ஆனால் , உத்தவ கீதையில் தனக்குப் பிடித்த சிறு பூ , பட்டாம்பூச்சி , மாதம் , வேதம் , கானம் என்று பெரும் பட்டியலைக் கொடுப்பான் . ‘‘ உத்தவா நான் உன்னிடம் மட்டுமே என்னைக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறேன் ’’ என்பான் . இந்த நூலும் அதுபோன்றுள்ளது . அணுக்கம் நிறைந்ததாக உள்ளது . விஷாத யோகம் உத்தவ கீதையைப் போலல்லவா இனிக்கிறது என்று தோன்றியது . ஏனெனில் , ஐயா பாலகுமாரன் அவர்கள் கேட்கப்படும் கேள்விக்கும் மேலானதொரு வினாவை உள்ளுக்குள் தோற்றுவித்துக்கொண்டே நகர்கிறார். பல இடங்களில் வினாவை விரித்து பதில்களால் வினாவை நிறைவு செய்கிறார். பொதுவாகவே , இதுபோன்ற கேள்...

தேடலின் விதை - 1

Image
உ ---- யோகிராம்சுரத்குமார் ------------------------------------- தேடலின் விதை... உரைக்கப்பட்ட வரலாற்றை விட மறைக்கப்பட்ட வரலாறே அதிகம். புதினம் என்ற பெயரில் தனது அரிப்பிற்கு சொறிந்து கொள்ளும் சீப்பாக ( cheap ஆகவும் ) வரலாற்றை திரித்து எழுதுபவர்கள் நிறைந்து இருக்கும் காலத்தில்...சோழர்களை தனது ஜாதீய அடையாளமாக மாற்ற முயற்சிக்கும் பலருக்கிடையே இத்தகைய முயற்சி பெரும் வரவேற்பிற்கு உரியது. இந்த நூலிற்கான ஒருங்கிணைப்பு வேலையை செய்தது மட்டுமே தனது பணி என்று விலகி நிற்பது திரு்.ராஜாராம் கோமகனின் பெருந்தன்மையாக இருப்பினும் அவரை பாராட்டுதல் நமது கடமைகளில் ஒன்று. அய்யன் பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்கள் வரலாற்றையும் , கற்பனையையும் அளவாக கலந்து தரும் புதினங்கள் வரலாற்றின் மீது ஆவலை மட்டுமன்றி இத்தகைய வரலாற்றுத் தேடலுக்கும் வழிகாட்டும் என்பதே நிஜம். ஒரு காதல் நிவந்தம் என்ற பாலகுமாரனின் நாவல் படித்துவிட்டு 21 வருடங்களுக்கு முன் செய்த திருவாரூர் , பனையவரம் பயணத்தை விட இன்றைய கங்கை கண்ட சோழனும், குடவாயில் பாலசுப்பிரமணியன் , கோமகன் அவர்களின் கட்டுரை படித்து விட்டு ஆடிதிருவாதிரை என்ற கல்வெட்ட...

ஐந்து முதலைகளின் கதை - ஒரு பார்வை

Image
யோகிராம்சுரத்குமார் ---------------------------------------- அரபு தேசத்து எண்ணெய் கிணறுகளே பல வணிகர்ளை தனது வயிற்றுக்குள் சொருகி வைத்துருக்கும் முதலை எனத்துவங்கும் முதல் அத்தியாயம் இந்த நாவலின் களனை விளக்கிவிடுகிறது. வணிகம் என வந்துவிட்டால் பெண்களையும் நண்பர்களையும் அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கும் பீட்டர் வழங்கிய நிறுவன பெயரே நாவலின் பெயராகவும் உள்ளது. விமான நிலையத்தில் உள்ள எல்லோரும் ஏன் கஷ்டமான காலங்களில் உதட்டை பிதுக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். இங்கு வெளிப்படுகிறது கதைநாயகனின் புதிய உலகம் காண பயணத்தின் முதல் ஆச்சரியம். என்னுடைய கனவுகளைச் சொல்வேன் நான். கனவுகளை அடையும் பாதையில் அவன் சந்தித்த இடர்களைப் பற்றி எனக்குச் சொல்வான். இதில் எனக்குப் பளிச்சிடும் good listener தன்மைகதையிறுதியில் underline ஆகும் போது எனக்கான புரிதல் பற்றி எண்ணம் வலுவானது. பக்கம் 25 இதில் ராஸ்கல் கேங் மூலம் நடைபெறும் கொலை விவரணை இது சாரு எழுத்துப்போல் இருக்கே என எனக்கு தோன்றியது முதல்முறையாக இங்குதான். வணிகமும் தத்துவமும் ஒன்றிணையக்கூடாது பொருள் சேர்ப்பது ஒன்று மட்டும்தான் வணிகத்தி...

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்

Image
உ  யோகிராம்சுரத்குமார் சத்தியம் என்ற சொல்   எழுத்துச்சித்தர் பாலகுமாரன்  ( 01.12.2016 ) நல்லவர்களுக்கு ஏன் துன்பம் அதிகம் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. இதற்கு பதில் மகாபாரத்தில் உண்டு. பஞ்சபாண்டவர்களில் ஏன் கிருஷ்ணன் அர்ஜூன்னைத் தேர்ந்தெடுத்தான் இதற்கு பதில் துன்பங்களில் மிகப்பெரியத்துன்பம் ஒரு ஆண்மகனை அவன் ஆணல்ல என்று சொல்லுதலே அத்தகைய துன்பத்தை அடைந்தவன் அர்ஜூனன். பிருங்நலை என்ற பெண்ணாக அஞ்ஞாத வாசகாலத்தில் இருந்த ஒரு வருடத்தில் அவன் கிருஷ்ணன் மீது கொண்ட நம்பிக்கையை விடவில்லை அதனாலேயே கிருஷ்ணன் அர்ஜூனன் மீது அன்பு கொண்டு அவனையே போரில் முன் நிறுத்துகிறார். கடவுள் என்ற சத்தியத்தை தொட அர்ஜூனன் போல் நம்பிக்கை வேண்டும். யோகிராம்சுரத்குமார் உடன் அய்யன் பாலகுமாரனுக்கு இருந்த அணுக்கம் போல் நமக்கும் கிடைக்காதா என்ற ஏக்கம் அனைவருக்கும் இருக்கும் அவ்விதம் குருவை சத்தியத்தைப் பற்றிக்கொள்ள என்ன வழி என்று சொல்ல அய்யா பாலகுமாரனை மேடைக்கு அழைக்கிறேன் உங்கள் கரகோஷம் அவரை வரவேற்கட்டும். இதுவரை திருமதி.சம்பத்லட்சுமி பாலாஜி. இனி அய்யன் பாலகுமாரனி...

எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 3

Image
71. எம். சுசீந்திரன் அய்யாவின் ஒவ்வொரு நாவலும் PhD கொடுக்கும் அளவிற்கு தகுதி பெற்றிருக்கிறது. 72. நடராஜன் மாரியப்பன் அய்யா தாலி எடுத்துக் கொடுக்க திருமணம் செய்து கொண்ட பாக்கியம் பெற்றவர்களில் நானும் ஒருவன். தீர்வுகளின் தியான மண்டபம் எங்கள் குருநாதர் பாலகுமாரன். 73. கல்பனா Balkumar is doing my fathers work என்பது யோகி ராம்சுரத்குமார் வாக்கு. 74. சாந்தி கோவிந்தராஜ் நீங்களே சுயமாக யோசிப்பதைத்தான் முதலில் சொல்லிகொடுப்பார். எந்த தராசிலும் வைத்து நிறுத்தி சமன் செய்யமுடியாது. 75. அறம் கிருஷ்ணன் தனக்கும் பாலகுமாரன் இராஜேந்திரன் சோழன் இடையே ஆன பயணத்தை விவரிக்கிறார். 76. எஸ். லட்சுமி நரசிம்மன் இந்தக்குமிழியின் ஓட்டம், இந்தக் குமிழியின் கைகளில் இல்லை என்பது மட்டும் புரிகிறது என்ற அய்யனின் தமிழரசி பேட்டியை குறிப்பிடும் கட்டுரை. 77. R. ஜெயக்குமார் எது கடவுள் தேட பாலகுமாரன் புத்தகம். எது கடவுள் நீ உணர பாலகுமாரன் குரு பகவானின் சந்திப்பு. இது நிகழ நாமும் கடவுளை உணர்வோம். 78. ஹரிஹரன் பாலகுமாரனின் எழுத்தின் மேதைமை அதை காசி சொம்பில் அடக்க ...