கங்கை கொண்ட சோழன் - பாகம் 1
---------------------------------------------------
யோகிராம்சுரத்குமார்
-----------------------------
அகலாது அணுகாது தீக்காய்வார் போல் மன்னனிடம் இருக்க வேண்டும் என்ற திருக்குறள் போல் நானும் அய்யன் பாலகுமாரனிடம் அணுகி...அகன்று இன்று இங்கிருந்து பார்க்க யோகியின் அலகிலா விளையாட்டின் காரணம் புரிகிறது. இந்த விலகல் மட்டுமே என்னை நடுநிலையில் பல பாடங்களை புரிய செய்துள்ளது.
உடையார் படித்தப்போது இருந்த பிரமிப்பு...பரவசம் இந்த கங்கை கொண்ட சோழனில் இல்லை....மனம் மெல்ல இதை அய்யன் செதுக்கிய விதம் பற்றி மெல்ல மெல்ல அசைப்போட்டு பிறகு நகரும் மனநிலை எனக்கு வந்திருப்பது காலத்தின் இனிய மாற்றம்.
அதற்கு எனக்கு தூண்டுகோலாக இருந்த அய்யன் பாலகுமாரனுக்கும்....கடவுளின் குழந்தை அடியார்க்கு நல்லான்...நாயேனையும் நயந்து வந்து என்னை என் நினைவின்றி ஆண்டு கொண்ட யோகிராம்சுரத்குமார் பாதம் பணிகிறேன்.
இனி முதல் பாகம் நுழைவோம்....
நான் வாசித்தது ஐந்தாம் பதிப்பு பாகம் ஒன்று அத்தியாயங்கள் இங்கு எண்ணிடப்பட்டு குறிப்பிடப்படும்.
1
நானூறு வருடங்கள் கழித்து சோழ சாம்ராஜ்யம் வீழ நடுக்காட்டில் பூஜை என்று ஆரம்பிக்கும் இதில் சோழசாம்ராஜ்யம் நன்றாக அமைய காரணமான சாக்த வழிபாடு பற்றி பேசப்படுகிறது.
உயர்ந்தது தாழும், தாழ்ந்தது உயரும் என்ற உலக நியதி கட்டியம் கூறப்படுகிறது.
இராஜேந்தினுக்கு சேதி சொல்ல ஒரு ஒற்றன் கிளம்புகிறான் இந்த யாகத்தை கண்ணுற்ற அவன் தேசபக்தி சிலிர்க்கச்செய்யும்.
சோழ தேசத்தின் ஐந்தாம்படையான ஒற்றர்படை முதன்மை படை என்ற எண்ணம் நம்முள் ஆணியடிக்கப்பட்டு இறங்குகிறது.
2
உணவு பற்றிய உணக்கை இன்றி அதில் விலகி இருந்து உற்று நோக்க உங்களுக்கு அதில் உள்ள சூட்சமம் புரியக்கூடும். சோழ நாடு சோறுடைத்து என்பதன் விஸ்தீரணம் சோற்றுக்கடை காட்சியில் விரிகிறது....இன்று பந்தியில்...ஒன்ஸ்மோர்...சந்தேகத்துக்கு என்று இன்னொரு முறை நாம் கேட்கும் பரிமாறுபவரை நாம் கேட்கும் விஷயம் சோழர் காலத்தில்...' ஒரு எண்ணம்' ' இங்கு ஒரு எண்ணம்' என்று இருந்தது என்கிறார் பாலகுமாரன் ....எதிரவாத எண்ணம் இல்லாமல் போகிறது நமக்கு அதுவே அவரின் விலகல் தன்மை தரும் நுண்கவனிப்பு.
கீழை சாளுக்கியத்தில் மோருக்கு ' பெருகு' என்ற பெயராம்.
மறவன் ஒருவன் அங்கே வருகிறான் கள்வெறியில் உணவுக்கு காசின்றி அங்கே சோற்றுக்கடையில் தகறாறு செய்கிறான்.
3
அருண்மொழிபட்டன் அவன் நாகைவிகார பயிற்சி...கேராளாந்தகன் வாயில் செவ்வகத்தூண் என்ற பலதும் விளக்கி கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் காட்டும் போது...அட இன்னொரு பிரம்மராயர் போல் இராஜேந்திரனுக்கா என்ற மகிழ்வு
ததும்புகிறது.
கண்டன் மாறன் என்ற அந்த மறவனின் கூச்சல் பசி இரண்டும் அடக்கப்படுகிறது.
கேராளந்தகன் வாயில் தூணை ராசராசன் தடவிய தூணை அருண்மொழி தடவி கண்ணீர் விடுகிறான் ....நாம் துடைத்துக்கொள்கிறோம்.
4
செம்புலி என்ற வெளிவட்ட மெய்காப்பாளர் பாதுகாப்பு குறித்தும் பிரகதீஸ்வரர் கோயிலின் நடமாட்டம் குறித்தும் பயன்படுத்தும் சமிஞ்சை குறியீடுகளான ' பிரகதீஸ்வரர் ' உறங்கிகொண்டிருக்கிறார்.
கருடப்பட்சி என்ற பெயர் காரணம் பற்றிய
தத்துவ விளக்கம் படித்து அனுபவிக்க வேண்டியவை.
அந்த இராஜராஜேஸ்வரம் கோவில் வளாகத்தில் வந்தியத்தேவர்....இராஜேந்திரன்...வீரமாதேவியுடனான சந்திப்பு நிகழ்கிறது.
ஏன் ?
5
பிரகதீஸ்வரர் கோயில் மூளியா ? முழுமையானதா ? ஏன் ? எவ்விதம் ?
அத்துமீறுகிறார் இராஜேந்திரன் கருவறையில் வந்தியத்தேவர் அருண்மொழி உடன் நுழைகிறார்.
தடுக்க விஷ்ணு அம்சம் மன்னன் விஷ்ணுவின் படைக்கலன் பாஞ்சசன்யம் சக்ராயுதம் என இருவரையும் குறிப்பிடுகிறார்.
வினைக்கு எதிர்வினை வருமல்லவா அதை பின்னர் இராஜேந்திரன் உணர்கிறார்.
சனாதன தர்மம் தாண்டாமல் அழகிய கதைப்பின்னல்....மனுதர்மம் வேறு சனாதன தர்மம் வேறு.
இராஜேந்திரன் தங்கை குந்தவை அரண்மனை சிறையில் கீழை சாளுக்கியத்தில் இருக்கும் செய்தி வருகிறது.
இராஜராஜனை வழிப்படுத்திய குந்தவையையும்....இனி இராஜேந்திரனை அல்லல் உறச்செய்யும் குந்தவையையும் மனம் ஒப்பிடச்செய்யத் துவங்குகிறது.
6
'சாலச் சிறந்த பெரியோன்' என்று இராஜேந்திரனை வர்ணிக்க அருண்மொழிக்கு தோன்றக்காரணமான முடிவு எடுக்கும் நிலை அது எந்த மேனேஜ்மெண்ட் தியரி படித்து அய்யன் எழுதியிருப்பார். அனுபவமே குரு. இராஜ நரேந்திரன் குந்தவையின் மகன் அறிமுகம். படையெடுப்பு பற்றிய ஆரம்ப கட்ட விவாதம். அதில் வயது வித்தியாசம் தாண்டி அருண்மொழியை பாராட்டும் வந்தியத்தேவர் குணம் என பல ரசனை அம்சம்.
7
பரவையாருடன் திருவாரூரில் காதல் பவனி வந்த இராஜேந்திரன் கோவில் உள்ள காதல் தீபம் என்று தேடுதலுக்கு தீனி உண்டு. மேலை சாளுக்கிய போருக்கு யார் தலைமை தாங்கிச்செல்வது என்ற விவாதம் அதன் தர்க்கம்... முடிவு.
8
ஹொட்டூரில் இராஜேந்திரன் செய்த அட்டூழியங்கள் பற்றிய கல்வெட்டுகள் ஒப்பாரி பாடல்கள் இன்னொரு வரலாற்று தேடலுக்கான...பயணத்திற்கான விதை.
மருவூர் சாம்பான் ....மாயா...கோயில் அய்யனின் பழைய நாவல்களை நினைவில் கொண்டுவரும்.
9
ஆதித்த கரிகாலன் முடிவுக்கு அவரே காரணம் அவரின் பரபரப்பான குணம் காரணம் அப்படியா ? ஸ்ரீ விஜயத்தில் சோழ தேசத்து வணிகர்களுக்கு தரப்பட்ட கடுமையான தண்டனை விரிகிறது. அடுத்த போருக்கான வலுவான காரணம் காட்டப்படுகிறது.
10
வீரமாதேவி வேங்கி சென்று குந்தவையையும் இராஜநரேந்திரனையும் கடத்தி கொண்டு வருகிறாள். கடும் அலையல் வீரமாதேவியார் கருகலைந்த தகவல் வருகிறது. நாட்டிற்காக இராஜேந்திரனுக்காக கருகலைப்பு செய்த பஞ்சவன் மாதேவி போல் வீரமாதேவியார் கருகலைப்பு செய்தி வருகிறது.
11
5 ம் அத்தியாயத்தில் தடாலடியாக கருவறையில் நுழைந்தமைக்கான
பிரகதீஸ்வரர் தந்த தண்டனையோ என இராஜேந்திரன் மருகுகிறார். 166 ஆம் பக்கத்தில் கங்கைஜலம் கொண்டு வந்து அபிஷேகம் என்று தொடரும் இந்த இடத்தில் ஏதோ பல தகவல்கள் தொடர்பின்றி விடுப்பட்டது போல் தோன்றுகிறது. உதவியாளர் பாக்கியலஷ்மி கவனத்திற்கு. திருநெடுங்களம் பதிகம் அசர வைக்கிறது.
12
ஸ்ரீ விஜய வணிகர்கள் சீன வியாபாரம் நாவாய்கள் சீன களிமண் பொருட்கள் புத்தர் சிலை உருக்கும் முடிவு. சைவ சமயத்திற்கு எதிரான சமயம் எதுவாயினும் எவராயினும் வீழ்த்துவேன் என்ற இராஜேந்திரன் சூளுரைப்பு.
13
அக்கசாலையில் அருண்மொழி காண புத்தர்சிலை உருக்கப்படல்.அதை பொன் நாணயமாக அடித்தல். போருக்கு முன் நாணயம் அடித்தல் அந்த தகவல் கசியவிட சகலரும் போருக்கு தயாராவார்கள்.
பாசத்தை அறுத்தால் பசு காணாமல் போகும். பதி மட்டுமே எஞ்சும் என்பதே சைவ சித்தாந்தம் சொல்லும் பசு பதி பாசம்.
மேலை சாளுக்கிய படையெடுப்பிற்கு உணவிற்கு தொண்டைநாட்டு அரிசி தானியங்களுக்கான திட்டமிடல்.
சீராளன் என்ற வணிகன் அறிமுகம். வேளாளர்கள் அந்தணர்கள் மயிலையில் தானியம் தர மறுத்தல்.
14
சீராளன் அவர் மனைவி தாமரைச்செல்வி அறிமுகம். இனிய யட்சினி...ஆயிரம் கண்ணி....அவளும் அவரும் என பல மாத நாவல்களில் முழு லட்டென வந்த இவர்கள் இதிலும் வர லட்டை பிய்த்து போட்ட பூந்தி என்ற நினைப்போடு தொடர இதில் சீராளன் முற்றிலும் புதியவனாய் அரிய தகவலோடு புதியதாக அசத்துகிறார். அருமை அய்யன் வாழ்க.
15
"உழவர் ஓதை மதகோதை
உடைநீர் ஓதை தனபதன் கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி"
ஒரு மயிலை வணிகன் தஞ்சை பெரு உடையாரை பார்க்கும் பார்வை ஸ்டெடி கேம் தோளில் வைத்து அவன் பார்வையை படமும் அவன் மனதை எழுத்தாகவும் ஆக்க எழுத்துச்சித்தரால் மட்டுமே இயலும்.
தளிச்சேரி பெண்டுகளில் சிலர் தஞ்சைவிட்டு கங்கைகொண்ட சோழபுரம் நகர மறுக்க அவர்களை அருண்மொழி கையாளும் திறன் மிகப்பெரிய மனிதவளத்துறை அதிகாரி கையாளும் நாசூக்கு.
You can raise and share your concerns but don't criticise a management decision it may harm you or sometime it will omit you...
There you are bala...அய்யன் நீங்கள் மெர்க்குரிப்பூக்கள் முதல் இன்று வரை மனதை கவனிக்கும் எண்ணம் எழும் இடத்தை உற்று நோக்க அதுவே இங்ஙனம்.
உங்களில் ஏற்றப்பட்ட நிஷ்டா.. சபூரி...என்ற இரு விளக்குகள் குரு மூலம் ஊதி தணலாக்கப்பட அனைத்து கலைகளும் உங்கள் காலடியில் நமஸ்கரிக்கிறேன் என்று இந்த அத்தியாயம் முடிய நகர முடியாத பேரவஸ்தை உண்டாகிறது.
16
கம்மாளர்கள், பறையறிவிப்போர், மரத்தச்சர்கள், காடு வெட்டிகள், காரை வெட்டிகள், தரையை சமனப்படுத்தும் கொந்தனார்கள் என சகலரும் தயாராக .....குதிரைக்கு லாடம் கட்ட வேண்டிய அவசியம் காட்டப்படுகிறது.
A battle cannot be lost due to want of horse shoe nail....திட்டமிடல் என்பதன் விரிவாக்கமாய் இந்த அத்தியாயம்.
17
விமலாதித்தன் மரண அவஸ்தை.
மறவன் ஒருவன் குடும்பத்தினர் இடம் இருந்து போருக்கு புறப்பட விடைபெறும் நிகழ்வு.
18
போர் வீரர்கள் இரவு தங்கும் இடத்தில் முதல்சோறு நன்றாக வந்துவிட வெற்றி நமக்கே என்று கட்டியம் கூற...குதிரை ஒன்று கறுப்புத்துணி கட்டிய ஈட்டி தாங்கி துக்கச்செய்தியோடு தஞ்சை அரண்மணை நோக்கி விரைந்தது.
மோசம் போய் விட்டேன் அண்ணா என்று குந்தவை அலற....மோசம் செய்து கொண்டாய் என்று குந்தவையை கடிந்து கொள்கிறார் இராஜேந்திரன்.
19
மருத்துவ தைலம்... காய்சலுக்கான குளிகை என சகலமும் தயார் நிலையில்....வைக்கோல் பிரி சுற்றிய மண் சாடிகளில் தயார் நிலையில் வைக்கப்படுகிறது.
இராஜராஜ பிரம்மராயர் , மிலாடுடையார் அறிமுகம் அவர்களின் நெருக்கம்.
போர் என்பது பெரிய திட்டமிடல்...இந்தமுறை பொற்கொல்லர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும்...சென்ற முறை தங்கம் என்று நினைத்து வெண்கலம் எடுத்து வந்துவிட்டோம் என்று துல்லிய திட்டமிடல் வசனங்கள் மூலம் நிலைநாட்டப்படுகிறது.
20
சீனக்கழஞ்சு தந்தாலும் வேண்டாம் எனச்சொல்லும் வாயிற் காப்போன்...சோழ தேசத்தில் கையூட்டு பெற கையை வெட்டி விடுவார்கள் என்கிறது ஒரு வசனம்.
ஹூம்...
சீனத்து மரக்கலன்கள் நாவாய்கள் பற்றிய விவரணை அதை இராஜேந்திரன் உள்வாங்கல்...ஸ்ரீ விஜயத்திற்கான போர் அங்குள்ள இந்துக்களை காக்க...சோழ தேசத்து வணிகர்களை காக்க.
கீழைச்சாளுக்கியம் தாண்டி ஒட்டத்தேசம் வரை உளவு பார்க்கும் வேலைக்கு சரியானவர்கள் அந்தணர்கள் என்ற தீர்மானம்.
21
ஒட்டர்கள் ....வங்கம்....கங்கை என்று போர் நீளுமென இராஜேந்திரன் முடிவு.
குந்தவை இராஜநரேந்திரன் திருமணத்திற்கு எதிர்ப்பு.
22
விஸ்வநாத ஸ்ரௌதிகள் நூறு பேருடன் காசி நோக்கிய பயணம் வெளிக்காரணம் பித்ருகடன் உண்மையான காரணம் சோழ தேசத்திற்கு உளவு சொல்லல்.
விஷ்ணுவர்த்தன் விஜயாதித்தன் இரண்டாம் மகன் கைது செய்யப்படல்.
23
அந்தணர்களின் புறப்பாடு. விஸ்வநாத ஸ்ரௌதிகள் இராஜேந்திரன் பற்றிய ஜாதக கணிப்பு. ஆயுட்காலம் தகவல்.
நவகண்டம் தராது தடுக்க வேண்டிய அவசியம்.
24
சீராளனிடம் மயிலை அந்தணர்கள் அரிசி தர மறுத்தல்.இராஜராஜ பிரம்மராயர் பிரம்பால் மயிலை அந்தணரை அடித்தல்.
25
குந்தவை ( அத்தை) யிடம் விடைபெறும் இராஜேந்திரன்...பள்ளிப்படை கோவில்கள் பராமரிப்பு பற்றிய விவாதம்.
26
பக்கம் 424 & 425 இராஜேந்திரன் படையின் Team Crew கல்வெட்டு பெயர்கள் இவைகளை தேடி பயணப்படவேண்டும்.
27
கடற்பயணத்திற்கான மருந்துகள் அதில் முக்கியமானது கிச்சிலிக்காய். கடற்பயணத்தில் வாந்தி வர காரணம் என்ன?
தூளிகட்டி தூங்குதல் கடற்பயணத்தில் நலம்?
28
தைலங்களின் வகைகள் அவற்றின் பயன்பாடு ஜாடிகள் ஏற்றல்...நித்தவினோதகப்பெருந்தச்சன் வில்பொறி...
பிரம்புக்கேடயம். ஜெயங்கொண்டம் சிற்ப தயார்நிலை சண்டேஸ்வரர் சிற்பம்.
29
15 சேனாதிபதிகளாவது மரணமடைவார்கள் என்பது பற்றிய கணிப்பு. ஜெயங்கொண்டம் அரண்மனை விவரணை.
30
எசாளம் எண்ணாயிரம் மாணவர்கள் ருத்ரம் சமகம் சொல்ல....
" ஆதித்யச்சமே, ப்ரயச்சமே, பிரதிச்சமே..."
" அடேய் மே மே என்று சொல்லாதே உன்னையும் ஆடு என்று நினைத்து அறுத்துடப் போகிறார்கள் . பார்ப்பதற்கு குட்டி ஆடு போல் இருக்கிறாய்"
என்று போர்ப்படை வீரன் சொல்வது ரணகளத்திலும் நகைச்சுவை எப்படி அய்யன்?
31
சிற்பங்களின் விளக்கம்.
பராந்தகன் காலத்து குடவோலை உத்திரமேரூர் மண்டபத்துக்கு இராஜேந்திரன் பயணம்.
32
தாமரைச்செல்வியின் தியாகம். முண்டகக்கண்ணி என் மாறுதல். இன்றைய வாழும் வரலாறு.
33
நடுகல்லை இராஜேந்திரன் வணங்குதல்.வேளாளர் பூஜைசெய்ய அனுமதி தரல்.
34 & 35
இராஜநரேந்திரன் மடத்தனமான தன்முனைப்பால் இராஜாதிராஜ பிரம்மராயர்....மிலாடுடையார்....உத்தமசோழகோன் மூவரும் இன்றும் பள்ளிப்படையாக கலிதண்டியில்.
36
சொக்கன்கூத்து விவரணை.
கீழைச்சாளுக்கிய வாசலின் நரபலி தஞ்சையை எட்டுவதும் அவர்களின் எதிர்வினைகள்.
முதல் பாகம் நிறைந்தது.
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
என்னோடிரும்.
படங்கள் உதவி ரமேஷ் முத்தையன்..

Comments
Post a Comment