எழுத்துக்கு எழுபது - எதிரொலி - 1


                                                                       யோகிராம்சுரத்குமார் 
                                                                        --------------------------------------------
-






வெற்றிலைக்கொடி என்ற நாவலில் உடம்பு முழுக்க எறும்பு ஊறும் கனவா அப்படி என்றால் சக்தி உள்ளே ததும்புகிறது என்று அர்த்தம் என்பார் அய்யன்.

நேற்று காலை ஜூலை - 5 முதல் இன்னமும் என்னுள் சக்தியின் அரவணைப்பு அய்யனின் திருப்பாதம் தந்திருக்கிறது.

அவரின் அன்பான என் மனைவி பற்றிய விசாரிப்பு நாயினும் கடையேனான எனக்கு கிடைத்த அன்பின் பெருக்கு.
.
இன்றே இந்த மலர் முழுக்க படித்துவிட ஆவல் உண்டு....ஆயினும் அதிகம் பால் உண்ட குழந்தை கக்குவதைப்போல் ஆகிவிடும் என்பதால் இத்துடன் என் முதல் 30 பேர்கள் பற்றிய எதிரொலியை நிறுத்தி மீண்டும் பின்னர் பதிவேன்.

இது அவனருளாலே அவன் தாள் பற்றும் சூட்சமம்...குரு நாமம் என்னை காபந்து செய்யும்.

அதுவரை....

என்றென்றும் அன்புடன்...

சரஸ்வதி சுவாமிநாதன்.

06.07.2016.






1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஒரு பத்திரிகையாளனாக பாலகுமாரன் கேட்ட கேள்விகளுக்கு பிறகு வேறு எவரும் அத்தகைய கேள்விகளை தன்னிடம் கேட்டதில்லை என்று சொல்லும் ரஜினிகாந்த் தான் அவருடைய நண்பர் என்று சொல்வதில் பெருமை கொள்வதாக கூறியிருக்கிறார்.

2. பத்மஸ்ரீ கமல்ஹாசன்

தன் கவிதைகளை முதன்முதலில் பகிர்ந்து கொண்ட இரட்டையர்களான பாலகுமாரன் சுப்பிரமண்யராஜூ பற்றியும், அவர்களின் இலக்கிய விவாதம் பற்றியும் கூறிய கமல்ஹாசன் " வயது வெறும் நம்பர்தான் , speedometer இல்ல , வேகத்தை குறைக்காதீங்க" என்று அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

3. இல.கணேசன்

எழுத்துச்சித்தர் என ஏன் அழைக்கிறோம் என்று பாலகுமாரனின் படைப்புகளை முன்னிறுத்தி ஒரு கடிதம் , வாழ்த்துமடல்.

4. கவிப்பேரரசு வைரமுத்து

வாசிப்பைவிட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையைச சட்டை பிடித்து இழுத்து வந்து , " உட்கார்ந்து வாசி; பிறகு யோசி" என்று உலுக்கியவர்களில் ஒருவர் பாலகுமாரன். உன் வாசகர்களின் நீண்ட வரிசையில் நானும் ஒருவன் என்பதை பகிர்ந்த வைரமுத்து 1975 ல் நடந்த ஒரு வானொலி நிகழ்வை பதிவு செய்த விஷயம் பாலகுமாரனின் இன்னொரு பெயர் துணிவு எனக்காட்டும்.

5. சிவக்குமார்

தனக்கும் பாலகுமாரனுக்கும் இடையே ஆன வேறுபாடுகளையும் தங்கள் பயணத்தையும் பகிர்ந்த அவர், பாமா ருக்மணியோடு வாழும் கிருஷ்ணனாக பாலகுமாரனை உருவகப்படுத்தியும் இருக்கிறார். ஔவைபாட்டியின் ஒரு பொருத்தமான பாடலைக்கொண்டு வாழ்த்தியுள்ளார் சிவக்குமார்.

6. இராதாகிருஷ்ணன் பார்த்திபன்

பாலகுமாரனின் எழுத்தால் மனலயம் அடைந்தவர்களின் இதயத்துடிப்பே அவரின் நீண்ட ஆரோக்கிய ஆயுளுக்கு சந்தா கட்டும் என்கிறார் பார்த்திபன்.

7. வஸந்த். எஸ். சாய்

வெயில் காயப்போட்ட வத்தலைப்பற்றி பாலகுமாரன் எழுதினால் கதையில் உள்ள வெயில் தன்மேல் அடிக்கும் அதுவே பாலகுமாரன் என்று அய்யனின் கவிதை, சிறுகதைகளையும் சிலாகிக்கிறார். சினிமா அனுபவங்கள் அனுபவிக்க வேண்டிய வரிகள். பாலகுமாரன் - வஸந்த் என்ற சிந்துபைரவி டைட்டில் கார்ட் ஒரு தனிக்கதை. ஒரு குட்டிக்கவிதையில் பாலகுமாரனின் வாழ்வை எழுதியிருக்கிறார் வஸந்த்.

8. ராஜ்கிரண்.

குருவாக அய்யனை தான்
உணர்ந்ததை ராஜ்கிரண் விவரித்திருப்பார்.

9. ஷங்கர்

பாலகுமாரனின் புத்தகம் படித்து அதில் உள்ள வரிகளை அடிக்கோடிட்டு அவ்வப்போது ஊக்கம்பெற படிக்கும் உள்ளதை வெளிப்படுத்திய ஷங்கரின் இந்த பழக்கத்தில் என்னை நான் அடையாளம் கண்டேன். " டேய்...குடுடா நுற " என்று நல்ல சீன்களுக்கு நூறு ரூபாய் பரிசு வாங்கியவர் பாலகுமாரன் என்று பல சுவாரசிய பகிர்வுகள். வாழ்க ஷங்கர்.

10. செல்வராகவன்

உங்கள் கண்களில் எப்பொழுதும் பளிச்சிடும் உண்மையின் ஒளி. அணையாத ஜோதி. ஸ்ரீ யோகிராம்சுரத்குமார் குடியிருக்கும் குடில். இன்னும் பல பரவச வரிகள் தந்து அசத்தியிருக்கிறார் செல்வராகவன்.


11. எஸ்.வி.சேகர்

தனக்கு நடிகன் ஆவாய் என்ற நம்பிக்கை தந்த சோதிடம் அவ்விடம் நகரச்செய்த பாலகுமாரன். யோகியுடனான பரிச்சயம் என விரிகிறது சேகரின் எழுத்து.

12. K. மாணிக்கம்

பாலாவின் பல நூல்களில் இருந்து மேற்கோள் காட்டி ஒரு பாராட்டு.

13. இந்துமதி

தான் பரிசுத்தமாக நிற்க அய்யனிடம் முதலில் மன்னிப்பு கேட்டு அதை ஆரம்பமாக வைக்கிறார் இந்துமதி அப்படி என்ன நிகழ்வு. தாயின் ஸ்தானத்தில் இருந்து ஒரு ஆசிர்வாதம்.

14. ராஜேஷ்குமார்

1982 ல் சாவி அலுவலகத்தில் இவரை சந்தித்த பாலகுமாரன் நீங்க கண்டிப்பாய் ஆயிரம் நாவல்கள் தாண்டுவீங்க என்ற அய்யனின் தீர்க்கதரிசனம் ஆன்மீகபலம் பற்றி குறிப்பிடுகிறார் ராஜேஷ்குமார்.
தன் பாதங்களில் வீழ்ந்து வணங்குபவர்கள் தன் பாதத்தில் வீழ்ந்து வணங்குகிறார்கள் என்று எண்ணாமல் தன் குருவின் பாதங்களில் வீழ்வதாகவும் அதனால் அவர்களோடைய கஷ்டம் யாவும் கரைந்து போகும் என்று தான் நம்புவதாகவும் அய்யன் பாலகுமாரன் ராஜேஷ்குமாரிடம் கோவையில் ஒரு விழாவில் சொன்ன தகவலை பகிர்ந்துள்ளார்.

15. சுபா

சக எழுத்தாளர்களுக்கு பாலா செய்த அன்பு வழிகாட்டல் என விரிகிறது இவர்களின் பகிர்வு.

16. மீ. விஸ்வநாதன்

கவிதையாக ஒரு வாழ்த்து

17. சாருநிவேதிதா

மனிதர்களுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையில் சில மனிதர்கள் அப்படிபட்ட சித்த புருஷராக பாலகுமாரன் உயர்ந்திருக்கிறார்.

18. மரபின் மைந்தன் முத்தையா

ஒரு குருவின் தேவையை நவீன யுக இளைஞனுக்குத் தெளிவாக விளக்கியதில் பாலகுமாரன் அவர்களின் பங்கு மிகவும் பெரியது. இன்று அவரையே தன் ஆன்மீக குருவாக ஏற்றுப் போற்றுபவர்களும் பெருகி வருகின்றனர் என்கிறார் இவர். 

19. மாலன்

தான் கண்ட இளைஞன் பாலகுமாரனையும், அவரின் சுழித்தோடும் காவிரியில் ஆடிய களியாட்டம். தன் பழைய நண்பனை மீண்டும் நினைவு படுத்திய பதிவு.

20. தேவிபாலா

பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் எப்படியோ அப்படித்ரான் பாலகுமாரன் தனக்கு என நெகிழ்கிறார் தேவிபாலா. 


21. தேவகோட்டை வா.மூர்த்தி

விட்டில் பூச்சிகள் என்ற பாலகுமாரனின் கவிதை நூலை தன் வசம் வைத்திருப்பவர்கள் பெருமை கொள்ளலாம். கடிதம் காட்டிய அன்பு பற்றிய கட்டுரை. பாலகுமாரன் ஆசிரியராக இருந்த ஒரு குமுதம் இதழில் இவரைப்பற்றி குறிப்பிட்டதை நினைவு கூர்ந்தார்.

22. R.ரங்கராஜ் பாண்டே

சாதாரண வார்த்தைகளில் கூட கூடுதல் கவனம் தேவை என்று கற்றுத்தந்தவர் பாலகுமாரன். அவரது புகைப்பழக்கத்தை கைவிடக்கோரிய கட டுரை மிக முக்கியமானது. பதின்ம வயதில் தனக்கொரு முகம் கிடைக்குமா என இருந்தபோது கிடைக்கும் கிடைக்கும் என அறுதியிட்டுக்கூறியவர் பாலகுமாரன். யோகியின் படத்தோடே தான் பயணிக்க காரணம் அவர் என்குரு அவரை துதிக்க காரணம் பாலகுமாரன் கைக்காட்டியது என்கிறார்.

23. இந்திரா சௌந்தர்ராஜன்

எழுத்தாளன் தன் ஆன்மீக நிலைப்பாட்டை வெளிபடுத்தமாட்டான் என்பதை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தவர் பாலகுமாரன் என்கிறார்.

24. ப்ரியா கல்யாணராமன்

மனதில் பட்டதை படாரென முகத்தில் அறைவது போல் சொல்வார் முதலில் அது லேசாய் வலிக்கும். ஆனால் புரிந்தபின் கரும்பு !.

25. ஜெயராமன் ரகுநாதன்

சத்தியத்தின் உணர்ச்சிக்குவியல்.

26. நக்கீரன் கோபால்

நல்லோதோர் வீணை என்ற விளிப்பு.

27. சுந்தர் பரத்வாஜ்

உடையார் பயணம்.
இன்றைய இளைய தலைமுறையினர் தேடும் பல்வேறு கேள்விகளுக்கான காலப்பெட்டகம் பாலகுமாரன் என்கிறார் இவர்.

28. கிருஷ்ணா

இன்னொரு உணர்ச்சிக்குவியல். சத்தியம். எழுத்துக்கு எழுபது என்ற விழா மலர்  உருவாக முனைப்பு காட்டியவர். வாழ்க்கையில் அது போற போக்குல அந்த ட்ரைவ்லதான் கத்துக்க முடியும் என்பது பாலாவின் பாலபாடம் என்கிறார். இவர் பேசிய மேடைப்பேச்சில் அய்யனோடு நானும் இருந்த பாக்கியம் கட்டுரை படிக்கையில் உணர்ந்தேன்.


29. பல்லடம் இராசேந்திரன்

அன்பை சொல்ல வேண்டாம்.செயலாக்க வேண்டாம். அன்பாகவே மாறி விடுதல். அன்பை எளிதில் உணர்த்திவிடும். என்று அறிவுறுத்தியவர் பாலகுமாரன் என்கிறார்.

30. வி.ராம்ஜி

முழுவதுமாக மாறின ராம்ஜியின் கன்னம் தடவி உன்னை மாற்றிய அந்த புண்ணியவான் ( பாலகுமாரன் )நல்லா இருக்கணும் என்று அம்மா அழுதாள் என்கிறார் ராம்ஜி ஏன் ? பாலகுமாரன் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான சொத்து. .

Comments

  1. அருமையான, நேர்மையான விமர்சனம்

    ReplyDelete
  2. அருமையான, நேர்மையான விமர்சனம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்