ஐந்து முதலைகளின் கதை - ஒரு பார்வை

யோகிராம்சுரத்குமார்
----------------------------------------




அரபு தேசத்து எண்ணெய் கிணறுகளே பல வணிகர்ளை தனது வயிற்றுக்குள் சொருகி வைத்துருக்கும் முதலை எனத்துவங்கும் முதல் அத்தியாயம் இந்த நாவலின் களனை விளக்கிவிடுகிறது.

வணிகம் என வந்துவிட்டால் பெண்களையும் நண்பர்களையும் அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கும் பீட்டர் வழங்கிய நிறுவன பெயரே நாவலின் பெயராகவும் உள்ளது.

விமான நிலையத்தில் உள்ள எல்லோரும் ஏன் கஷ்டமான காலங்களில் உதட்டை பிதுக்குகிறார்கள் என நினைத்துக் கொண்டேன். இங்கு வெளிப்படுகிறது கதைநாயகனின் புதிய உலகம் காண பயணத்தின் முதல் ஆச்சரியம்.

என்னுடைய கனவுகளைச் சொல்வேன் நான். கனவுகளை அடையும் பாதையில் அவன் சந்தித்த இடர்களைப் பற்றி எனக்குச் சொல்வான். இதில் எனக்குப் பளிச்சிடும் good listener தன்மைகதையிறுதியில் underline ஆகும் போது எனக்கான புரிதல் பற்றி எண்ணம் வலுவானது.

பக்கம் 25 இதில் ராஸ்கல் கேங் மூலம் நடைபெறும் கொலை விவரணை இது சாரு எழுத்துப்போல் இருக்கே என எனக்கு தோன்றியது முதல்முறையாக இங்குதான்.

வணிகமும் தத்துவமும் ஒன்றிணையக்கூடாது பொருள் சேர்ப்பது ஒன்று மட்டும்தான் வணிகத்தின் தர்மம். இது காவியன் வார்த்தை ஆனால் இது சரவணன் வாழ்க்கைமுறையுமோ என்ற கேள்வி என்னுள்.

பாலுக்கும் தேனுக்கும் அன்று பிறந்த குழந்தை வாய்திறப்பது போல் கடல் அட்டைகள் சாதுவாக கடலில் கிடக்கும் கடல் அட்டைகள் இதில் அடர்த்தியான அழகு வெளிப்படுகிறது.

என் பகடையாட்டத்தை நான்தான் ஆடுகிறேன் பிறர் யாரையும் விளையாட அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டின் உறுதி ஒரு அலாரம் என ஒலிக்கிறது .


அல்கெமிஸ்ட் நாவல், அரசியல் ஜாதகம், மணல் மாபியா என ஊடாடும் வேறு களன்கள் உறுத்தாமல் இருப்பது எழுத்தின் சிறப்பு . அனுபவங்களின் தொகுப்பு. சாருவை நிலைப்படுத்திய இரண்டாம் தருணம்.

ஆண்மைக்கு பெருக்க sea cucumber எனும் வெள்ளை கடல் அட்டைகள் மனிதர்களின் உளவியல் குறைபாட்டை சந்தைப்படுத்தல் என நீள்கிறது அவரின் தரிசனம்.

டாஸ்மாக் சரக்கு குடித்த வளர்ந்த உடம்பு விஷத்தை குடித்தாலும் ஒன்றும் ஆகாது என வெளிப்படும் பகடி வரிகள் செம.

பல படிமங்கள் என காட்சிதரும் முதலை ஏசாவின் சிரிப்பில். தெரிந்தது என்ற வரிகள் பகீர் எனும் ஷாக் vital lines too.

உன்னையும் கூப்பிட்டுக்கறேன் என்று பேசும் வார்த்தைகளில் பின்னால் இறுக்கும் ( right word )தூண்டில். புரியும் போது மனிதர்களின் தந்திரம் குறித்து அதிர்ச்சி வெளிப்படுகிறது.

காபிலூவாஃக் பற்றிய வெளிச்சங்கள் இன்னொரு ஆச்சரியம் அனுபவங்களே ஆசான் என்பதன் நிதர்சனம்.


ரஷக்கிடோ ஒரு நல்ல இடையன் என விளக்க பயன்படுத்தப்பட்ட அல்கெமிஸ்ட் நாவலின்  வரிகள் நல்ல apt selection.


ஆட்டுக்கறி அதன் ஸ்பேர்பாரட்ஸ் உடன் விருந்து போன்ற வரிகளே நமக்கான breathing space.

சூயிங்கத்தில் கோகெய்ன் , அதன் நீட்சியாக உள்ளே மலரும் தாத்தாவின் அறிவுரை தேவைக்கு அதிகமான விஷயங்களை நீ யாரிடமும் கேட்காதே ; தேவைக்கு அதிகமான விஷயங்களை நீயும் யாரிடமும் சொல்லாதே என்ற நாயகன் பிண்ணனி இசையோடு ஒலிப்பினும் இது எமர்சனோ சொன்னதோ என மனம் தேடுகிறது.

திருப்பதி to சீனா என நடக்கும் செஞ்சந்தன மரக்கடத்தல் பயன்பாடு அதன் பின்புலங்கள் இதில் விளக்கப்படும் போது இதை கட்டுரையாக எழுதி உள்ளீர்களா சரவணன் என கேட்கும் நமது சமூக ஆர்வலர் மனம்.

மஜாஜ் பற்றிய தெளிவைத்தரும் வரிகளில் மீண்டும் சாரு.

அல்பி என்பவன் நீரோட்டத்திற்கும் காற்றோட்டத்திற்கும் நாங்கள் எங்களை ஒப்புக் கொடுத்துவிட்டோம் என்ற வரிகளின்  சரணாகதி மொத்தஅத்தியாயத்தின் பலுவையையும் இறக்கி வைக்கிறது . well done. God bless you.


108 வது திவ்யதேசம் பரம பதம் எங்கே என வழி கேட்பார் என்றவரிகளில் நான் 108 திவ்ய தேசம் போய்விட்டு வந்துட்டேன் என்ற மாமி எனக்குள் வந்துப்போனார் smiled a lot.


வாழ்க்கை ஒரு காட்டாறு அதில் தக்கையைப்போல் எண்ணங்களை மாற்றிவிடு ஒரே விஷயத்தை பிடிதொங்கிக்கொண்டிருக்குகாதே அதுவும் ஒரு அனுபவம் எனக் கடந்துவிடு என்றான்தினேஷன்.

நாசி கரங் பற்றிய விகல்பமில்லாத நடுநிலையான விவரணையில் I I felt Charu again.

ஐடியாக்களை punch செய்ய ஒரு பிஸினஸ்மேன் தயங்கவே கூடாது.

சொல்வதற்கு நிறைய கதைகளோடும் கேட்பதற்குத் திறந்த காதுகளோடும் ...

this may be your secret of success.


கப்பல்கள் கட்டப்படுவது கடலில் நீந்துவதற்காகவே கரையில் நிறுத்தி வைப்பதற்காக அல்ல. வாசிப்பின் பலம் காட்டிய வரிகள்.

தனிப்பட்ட முறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்காதே நீ மனநல மருத்துவன் கிடையாது வணிகன் ஏறி மிதித்துப் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று காவியன் பேசும் போது அமைதிப்படை அமாவாசை வந்து போகிறார்.

வீணாக்கும் ஒவ்வொரு தம்பிடிக்காசும் என் குழந்தைகளின் சிரிப்பு.

conscious decision making time here.

World without oil என்ற டாகுமெண்டரி ஒலிபரப்பினார்கள் என்ற வரியில் மனமும் கையும் 19 ம் அத்தியாயம் to 1 ம் அத்தியாயம் தாவியது.

https://www.youtube.com/watch?v=BXUh5GUcnmQ&t=584s

காதல் செய்கிற நாய்களைக் கல்லெறிந்து துரத்துகிற தேசத்திலிருந்து வந்த எனக்கு

என்ற வரிகளில் சாருவின் கருணை அற்ற சுய எள்ளல் சாயல் தெரிந்தது.

fried rice என்ற பெயரில் ஆளைக் கொல்லும் உணவை சமைக்கிறார்கள்.

செஃப் ஜேக்கப் க்கான அஞ்சலியோடு அவருடைதியாகத்தையும் காட்டுது ஒரு அத்தியாயம்.

பசிபற்றிய பேரவஸ்தையை விவரிக்கும் வரிகள் வலிகள். இது என்னைக் கவர்ந்தது போல் சாருவிற்கும் பிடித்திருந்தது என இப்புத்தகம் முடித்து பின்னர் சரவணன் சந்திரன் என கூகுள் செய்ய கிடைத்த ஒரு வீடியோ இங்கே தரப்பட்டுள்ளது.

http://www.lectoro.com/index.php?action=search&ytq=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%20@%20%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%20-%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88


நீ சுயம்புடா நீ தோக்கமாட்டே என்று ராஜா சொல்லும்போதே ....அவன் சுயம்பு அல்ல பலரால் உருவானவன் என நூலின் முன்னுரை சொல்கிறது.

கடைசி நிமிடத்தில் ஆட்டத்தைமாற்றக்கூடிய வல்லமையுடையவன் தான் தலைவன் என்றவரிகள் ....well placed...

எனக்குக் கிடைத்த துரியோதனன் அவன் . என் நண்பன் .....இந்த வரிகளில் அர்த்தம்....ஆழமானது....

இரட்டை மனநிலையில் இல்லாமல் நிதானமாக கால் தரையில் கால் பதிக்கும்போதுதான் சிந்தனைகள் தெளிவாகும்.

ஒருநாள் முழுக்கக்கூட ஒருவனைப் பேசவிட்டுக் கேட்டுக் கொண்டிருக்க உன்னால் முடியும் அது சிறிது காலம் கழித்து உன்னை ஒரு உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்க்கும்.....

வணிகனாக இருக்கப் போகிறாயா கலைஞனாக இருக்கப்போகிறாயா என்பதை நீ முடிவு செய்ய முடியாது. காலம்தான் முடிவு செய்யும்.

புயல் காற்றில் மரக்கிளையொன்றில் அமரும் பறவையொன்று அந்தக் கிளைகளை நம்பி அதில் அமரவில்லை தன் சிறகுகளை நம்பியே அங்கு அமர்கிறது....

என்ற வரிக்கு பின் வரும் சுய அலசல் சத்தியம்.

கதையின் இறுதியில் வரும் கவிதையின் சில வரிகள் இந்த அனுபவ தொகுப்பிற்கு பொருத்தமானவை....


அவை.....

A truth preached....

There are no causes forgotten....

In the media of trauma....

The human side of life ,twisted....

இது postmodern classic என்ற வரையறை எனக்கு தெரியாது....சாருவின் ஏகலைவன் நீங்கள் என்பதோ....அவரின் Geneology என்பதெல்லாம் அறியாமல் இத்துடன் இணைக்கப்பட்ட சாருவின் உரை பார்க்காமல் உங்களின் மூன்று புத்தகத்தையும் நண்பர் கோபிநாத் வாய்மொழி தகவல் மூலம் வாங்கினேன்.

ஆனாலும்....

இவரின் நாவல்களை பலரிடம் சேர்க்க என் முயற்சிகள் இருக்கும் ஏன் அனுபவங்களை எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தல் வரம்.

செய்க தவம் தவமாவது எழுத்து.

வாழ்க வளமுடன் ....

God bless you ....

சரஸ்வதிசுவாமிநாதன்
18.12.2016.












Comments

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்