பொன்.வாசுதேவன் அண்ணாவிற்கு...
யோகிராம்சுரத்குமார்
11 - 13 பின்னொரு காலத்தில் புரிதலாகும்.
14 ஆத்மாநாமோ என்ற மணி அடித்த மனதோடு....
15 எல்லோருக்கும் நேரும் வாழும் தருணத்தின் வார்ப்பு
16 - //சிலர் கொல்வதற்கான உபாயங்களையும், சிலர் கருவிகளையும் தருவதாக உறுதியளிக்கிறார்கள்//
17 உள்ளே இருப்பவனை நோக்கிய பிரயோகம்.
18 // பிரகார வெளியாய் நீண்டிருக்கும் கால்கள்// செம அவதானிப்பு
20 // புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள் //
ரசனை உள்ளவர்களிடம் ஏதேனும் ஒரு கட்டத்தில் எனது "சிறிய" சேமிப்பு புத்தகங்களை தந்துவிடவேண்டுமென்ற எச்சரிக்கை மணி இக்கவிதை.
10.07.2016.
உன்மத்தப் பித்தன்
--------------------------------------
--------------------------------------
அன்பு தம்பி சுவாமிநாதனுக்கு என்று பொன்.வாசுதேவன் சொல்லும் போது....எங்களுக்கிடையே ஆன உறவை நூல் , நூலகம், நூலகர் ( என் அப்பா நாராயணராவ் ) மதுராந்தகம் என பலதும் விரிகிறது....எங்களுக்கிடையே அதிக உரையாடல் இல்லை எனினும் எங்களின் விரல்களுக்கிடையே ஊர்ந்து கொண்டிருக்கிறது அன்பெனும் உயிர் நிலை. ( உங்கள் முதல் கவிதையில் சுட்ட வரிகள் தான் அண்ணா )
வாழ்வின் அநித்யம் நிதரசனம் இரண்டையும் இணைத்து நீ வெறும் பார்வையாளானாய் இரு என்று அன்றைய / இன்றைய வாசுதேவன் சொல்கிறார்கள்.
இது இரண்டாம் கவிதை.
இது இரண்டாம் கவிதை.
மிகத்தெளிவான தீர்க்கமான உன்மத்த நிலையில் மூன்றாம் கவிதை....நீயுமில்லை....நானுமி ல்லை என்கிறது ஆனால் பித்தன் என்கிறது பொதுப்பார்வை.
இது கவிதையா? இல்லை கீதையா ? கீதையின் உத்வேகத்தை உசுப்பலை தரும் கவிதையா நான்காம்கவிதை...// பயங்களோடு பதுங்கியிருத்தலைவிடவும் //.
// கைத்தவறிய நூற்கண்டாய்
முன் உருண்டோடிக் கொண்டிருக்கிறது காலம் //
முன் உருண்டோடிக் கொண்டிருக்கிறது காலம் //
கைதவறினாலும் கட்டுப்பாட்டில் இல்லையெனினும் நமது கைகளிலே இருக்கும் வாழ்வை ருசித்து வாழ்பவருக்கே சுகம் தரும் ஐந்தா மனம் ஒட்டி ஒட்டாமல் இருக்க சூழல் என்னதரும்....பன்றியின் பேரோலம், இரத்தம் வரையும் சித்திரம், ஓய்ந்த போராட்டத்தில் சிதறிக் கிடக்கும் செருப்புகள் என சகலத்தையும் பதிவாக்கும் என்கிறது ஆறாம் கவிதை.
ஏழாம் கவிதை நிஜம்...நண்பனின் பித்துபிடித்த தங்கை நினைவில்...
எட்டாம்கவிதை ஒரு தற்குறிப்பேற்றம் இருபாலர்க்கும் பொருந்தும்.
நம்மையும் நம்மைச்சூழ்ந்த உலகில் பலரை அடையாளம் காட்டும் ஒன்பதாம்கவிதை...// அவரவர் தந்திரங்களுடன்//
வாழ்வின் திறவுகோல் வேறொன்று என்பதை புரிந்தகொண்ட உடலின் வெளிப்பாடு பத்தாம் கவிதை
11 - 13 பின்னொரு காலத்தில் புரிதலாகும்.
14 ஆத்மாநாமோ என்ற மணி அடித்த மனதோடு....
15 எல்லோருக்கும் நேரும் வாழும் தருணத்தின் வார்ப்பு
16 - //சிலர் கொல்வதற்கான உபாயங்களையும், சிலர் கருவிகளையும் தருவதாக உறுதியளிக்கிறார்கள்//
17 உள்ளே இருப்பவனை நோக்கிய பிரயோகம்.
18 // பிரகார வெளியாய் நீண்டிருக்கும் கால்கள்// செம அவதானிப்பு
19 // ரசிக்க ஆளற்றுப் பூத்திருக்கும்
வயலட் நிற எருக்கம் மலர்களின் மேல்
ஆறுதலாய்ப் பொழிகிறது முதிராத பனி//
பன்முகத்தன்மையோடான குறியீடு.
வயலட் நிற எருக்கம் மலர்களின் மேல்
ஆறுதலாய்ப் பொழிகிறது முதிராத பனி//
பன்முகத்தன்மையோடான குறியீடு.
20 // புழுங்கிக் கொண்டிருக்கின்றன புத்தகங்கள் //
ரசனை உள்ளவர்களிடம் ஏதேனும் ஒரு கட்டத்தில் எனது "சிறிய" சேமிப்பு புத்தகங்களை தந்துவிடவேண்டுமென்ற எச்சரிக்கை மணி இக்கவிதை.
21, 22 , 23, 24, 25 ஆத்மாநாமோ என்ற அதிர்வை தருகிறது.
Just leave it as it is என்கிறது மரம் பற்றிய கவிதை
// நீ இறந்துவிட்டாய்
உனக்கு வலிக்காது , வலிக்காதென //
உனக்கு வலிக்காது , வலிக்காதென //
அது மரங்கொத்தி என்று கவிதை சொன்னாலும் அது பறவையல்ல என்கிறது மனம்.
// உங்கள் வார்த்தைகள்
நிகழ்த்தும் எதிர்வினைகளைத் தீர்மானிப்பது
நீங்களாக இருப்பதில்லை
கேட்பவரின் உரிமையாக
அது இருக்கிறது //
Be cautious on your words என்கிறது.
நிகழ்த்தும் எதிர்வினைகளைத் தீர்மானிப்பது
நீங்களாக இருப்பதில்லை
கேட்பவரின் உரிமையாக
அது இருக்கிறது //
Be cautious on your words என்கிறது.
நிழலின் வாக்குமூலம்
------------------------------------------
------------------------------------------
இரண்டாவது கவிதை எனக்கேனோ திருவண்ணாமலை யோகிராம்சுரத்குமாரின் சந்நதி தெருவிற்கு அழைத்துச்சென்றது.
நான்காவது கவிதையில் // உள்ளலைகிற சுவாசத்தோடு பேசியபடி நான் // என்ற வரிகளில் தனிமையின் வலி, வலிமை இரண்டும் காட்டுது.
கவிதையை எழுதியப்பின் கவிஞனுக்கு அதனோடு சம்பந்தமில்லை அது வாசிக்கிறவனின் மாயகம்பளம் ஆனாலும், காகித கப்பல் ஆனாலும் ஒன்றே என்கிறார் ஐந்தாவது கவிதையில்.
// அவள் யார் ; இவள் யார்
எல்லா அவளும் ஒன்றுதான்
எல்லா இவளும் அவள்தான் //
எல்லா அவளும் ஒன்றுதான்
எல்லா இவளும் அவள்தான் //
கண்ணதாசனின் எந்த கோப்பையில் குடித்தாலும் மதுவின் சுவை ஒன்றுதான் என்ற வரிகளில் சிலர் உணரும் விரசம் கூட இல்லாமல் இது உள்முக விசார முடிவாக தோன்றச்செய்வதே ஆறாம் கவிதை நகுலனின் பழைய கவிதையும் இதில் இடைசொருகலாக வருதல் புதிய உத்தி.
மனிதனின் ஆதித்தோழன் (நாய்கள்) பற்றிய கவிதை அல்லது நம் குணங்களின் கவிதை என எவ்விதமாகவும் உணரலாம்.
// அந்த வார்த்தைகள் அவரிடத்திலிருந்த்து
அந்த வார்த்தைகள் அவராயிருத்தது // யோவானின் புதிய ஏற்பாடு போல் உணர்ந்தாலும் இந்த கவிதை வாசிப்பின் நீட்சி சுயதரிசனத்தின் சாட்சி.
அந்த வார்த்தைகள் அவராயிருத்தது // யோவானின் புதிய ஏற்பாடு போல் உணர்ந்தாலும் இந்த கவிதை வாசிப்பின் நீட்சி சுயதரிசனத்தின் சாட்சி.
ஒரு நீண்ட பட்டியலாக எதிர்வினைகள் கடந்து காத்திருப்பவனின் மனநிலை இப்படித்தான் // வெண் சாம்பலுக்குள் பதுங்கியிருந்து பார்க்கிறது நெருப்பின் மிச்சம் // பாரதியை அக்னி குஞ்சொன்று கண்டேன் என மனம் பரவசமாகி ஆனந்த தாண்டவம் ஆடுவதும் திண்ணம்.
// ஏனானேன்
என்று தோன்றிய கணத்தில்
நானானேன் // என்ற கவிதை முடிவு சுயதரிசனத்தின் கீற்று.
என்று தோன்றிய கணத்தில்
நானானேன் // என்ற கவிதை முடிவு சுயதரிசனத்தின் கீற்று.
// பறக்கக் கடுத்த சிறகு
விழுந்து கிட தரையிலே
பறக்காவிட்டலென்ன // சும்மா இரு சொல்லற என்ற நிலையும் உன்மத்தமே.
விழுந்து கிட தரையிலே
பறக்காவிட்டலென்ன // சும்மா இரு சொல்லற என்ற நிலையும் உன்மத்தமே.
// உச்சியில் பறக்கும்
எச்சமிட்ட பறவைக்கு தெரியாது
தானுமிழ்ந்த விதை அதுவென்பது //
எச்சமிட்ட பறவைக்கு தெரியாது
தானுமிழ்ந்த விதை அதுவென்பது //
நீங்களே என் பறவை அண்ணா....
https://m.facebook.com/story.php?story_fbid=1742936909320658&id=100008130967768
61 பக்க கவிதையில் உணர்வின் பல்வித சுவைகளும் கசக்கி எறியப்பட்ட உணர்வும் கவிதையாக....கரும்புச்சாறு பிழிவதை பார்க்கையில் எனக்கும் வீசி எறியும் சக்கையாக என்னை உணர்ந்த்துண்டு.
// இம்சை
அகிம்சை
சத்தியம்
சோதனை
அசாத்தியம்
வாழ்க்கை// என்றொரு கவிதை. இம் சைக்கான எதிர்வினை அகிம்சையும், சத்தியத்திற்கான சோதனைகளுடன் ஊடாடும் அசாத்திய மனத்துணிவே வாழ்க்கை என்று எனக்கு புரிதலானது.
அகிம்சை
சத்தியம்
சோதனை
அசாத்தியம்
வாழ்க்கை// என்றொரு கவிதை. இம் சைக்கான எதிர்வினை அகிம்சையும், சத்தியத்திற்கான சோதனைகளுடன் ஊடாடும் அசாத்திய மனத்துணிவே வாழ்க்கை என்று எனக்கு புரிதலானது.
// உனக்கான பாவனைகளை இலகுவாக்கித் தருகிறாள் காயத்ரி// தந்தைக்கு மகள் தரும் இதம் தெரியும் வார்த்தை இறுதியில் // விதை நெகிழ்ந்து துளிர்க்கிறது // என்ற வரியில் உங்களை பலமுறை மலரச்செய்த அம்மகளை அன்போடு அரவணைத்து உச்சிமுகர்கிறேன்.
பாறை , இரவு , பறவை , நாய் , வலிகளின் பல்வேறு தரிசனம் இவைகளை உள்ளீடாகவும் அவைகளை தான் உள்வாங்கியதை உணரும் விதமாகவும் பலகவிதைகள் இரவின் நீளமான வாசிப்பும், கைகள் நழுவி வீழ்ந்த புத்தகமும் விடியலின் மீள் வாசிப்பும் மட்டும் இவ்விரு தொகுப்பை உணர போதுமானவை அல்ல இது ஒரு விள்ளல் , இவ்விரு தொகுதிகளையும் மீண்டும் மீண்டும் மனைவியோடு நிகழும் புணர்ச்சிபோல் அவ்வப்போது மனம் சோர்ந்த நேரங்களில் அவ்வப்போது வாசிக்க இயலும். அப்போது இதே தொகுப்பு புது வித தரிசனங்களை தரக்கூடும்.
என் மனதில் பட்ட சில விஷயங்களை சொல்லிவிடுகிறேன்....
உங்களின் பரந்துப்பட்ட வாசிப்பு பல இடங்களில் உங்கள் கவிதைகளில் அழகாக தன்னை மறைத்துக் கொண்டு வெளிப்படுத்துகிறது.
நீங்கள் சந்தித்த அளவிலா துயரமும் துரோகமும் உங்களை புடமிட்டது போலும், புதிய வாசல்களை திறந்துவிட்டது போலும் உணர்கிறேன்.
ராஜ சுந்தரராஜன் சொல்வது போல் வெளிப்போந்த வார்த்தை ஒருபோதும் வெறுமையாய்த் திரும்புவதில்லை.
// தொகுப்பிற்குத் தேர்ந்தெடுக்காத கவிதைகளை பிரதி வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அழித்துவிட்டேன் // என்ற உங்கள் உன்மத்தப்பித்தன் முன்னுரை வரிகள் எனக்கு ஏற்புடையவை அன்று.
உங்களின் அழகான கையெழுத்தில் உங்கள் பல நோட்டுப்புத்தகம் டைரி என நானும் , விஜய்பாரத், மணிபார்மஸி மணிகண்டன் அனைவரும் மறைந்த ராஜ்திலக் வீட்டு பேசிக்கொண்ட பல இரவுகளும் காலைகளும் என் நினைவில் உண்டு.
அன்றைய காலக்கட்டத்தில் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவோ இல்லை படம் எடுக்கவோ வாய்ப்பும் வசதியற்ற நானாக இருந்தேன். இதுவரை நீங்கள் வெளியிட்ட எந்த கவிதை தொகுப்பிலும் அக்கவிதைகள் இல்லை என்பதே என் வருத்தம்.
அக்காலத்தில் நான் ரசித்த புளியமரம், ரயில் பயணம், கோவில் கருவறை, தேர்திருவிழா, சந்தைகள், என்ற பல உங்கள் கவிதைகளில் ரசித்திருக்கிறேன். அவைகளை இன்றும் இழந்திருப்பதாக உணர்கிறேன். எனவே பிரதிகளை அழிக்கும் முன் எனை தொடர்பு கொள்ளவும் அண்ணா.
உங்கள் பரிமாணமும், உங்கள் தொடர்புகளும், கவிதை தேர்வாளர்களும் உயரிய நிலையில் இருப்பதன் மூலம் சில கவிதைகள் தள்ளப்படலாம் நான் இன்னமும் பழைய சுவாமிநாதனே...சரஸ்வதிசுவாநாதன் தவிர வேறொன்றும் புதியதாக இல்லை.
ரொட்டித்துண்டுகள் குழந்தக்களுக்கானவை நாய்களுக்கு இல்லை என்று மறுக்கப்படும் போது கீழே சிந்திய துணிக்கைகளை நாய்கள் உண்ணுமே என்ற பைபிளின் கெஞ்சலையே இங்கும் வைக்கிறேன் அண்ணா.
வேறென்ன // வாழ்வில் எந்த உறவும், பிரிவும் காரண காரியமற்று நடப்பதில்லை என்பதில் மிகுந்த நம்பிக்கை எனக்குண்டு// இந்த வரிகளில் நீண்ட நாளாக தள்ளிப்போகும் நமது யோகிப்பற்றிய தங்களுடைய அனுபவப்பகிர்வையும், உங்களுடனான ஒரு திருவண்ணாமலை பயணத்திருக்கும் காத்திருக்கிறேன். காலம் கைகூடி வரட்டும்.
சுமதிக்கும், காயத்ரிக்கும், சுதாகருக்கும் என் பிரார்த்தனைகள்
.
குருவருள் துணையிருக்கட்டும்.
யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா.
என்றென்றும் அன்புடன்...
சரஸ்வதிசுவாமிநாதன்
10.07.2016.




தங்கள் எழுத்து எனது ஆர்வத்தீயை நிமிட்டி உள்ளதால் .., வாசிக்க காத்திருக்கிறேன். நன்றி
ReplyDelete