Posts

Showing posts from December, 2020

'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 4

Image
                                             'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்     ஆங்கில மூலம்  :  பிரேம்நாத் மகாஜனி . தமிழாக்கம்  :  சரஸ்வதி சுவாமிநாதன் . அத்தியாயம் – 4 எதனால் ஹிந்து ? வரலாற்று ஆய்வாளர்கள் ஹிந்து நாகரீகத்தின் தடங்களை கலாச்சாரத்தை மற்றும் மதத்தை இந்தியாவை சூழ்ந்திருக்கும் நாடுகளான இலங்கை , பர்மா , மேற்காசியா , சைனா , ஜப்பான் , கிழக்கிந்திய நாடுகள் , இந்தோ - சீனா , போர்னியோ , இன்னும் பிறவற்றிலும் ஆராய்ந்தனர் . ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்களின் கூற்றுபடி இந்தியர்களின் இந்த நாடுகளுடனான தொடர்பு கி . மு . 600 ல் இருந்தே இருப்பதாக அறியப்பட்டுள்ளது . ஆனால் மகாபாரதப்படி ( கி . மு . 3000 ) முன்பிருந்தே தொடர்புகள் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் அறிகிறோம் . பாரத் ( இந்தியா ) என்பதே மஹாபாரதம் என்று அறியப்பட்டிருக்கிறது . இதன் எல்லைகள் இன்றைய இந்தியாவைவிட கிழக்கு , மேற்கு , வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் மிகவும் பரந்து விரிந்து கி...

'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 3

Image
                                                                          'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் ஆங்கில மூலம்  :  பிரேம்நாத் மகாஜனி . தமிழாக்கம்  :  சரஸ்வதி சுவாமிநாதன் . அத்தியாயம் – 3 தி என்சைக்ளோபிடியா பிரிட்டானிகா தி என்சைக்ளோபிடியா பிரிட்டானிகா வை மேற்கோள் காட்டும் முன் சில புகழ்பெற்ற அகராதிகளான வெப்ஸ்டர் , கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் இந்த ‘ ஹிந்து' என்ற வார்த்தை குறித்து என்ன சொல்லியிருக்கின்றன என்று பார்ப்போம் . ஹிந்து            - இந்தியன் , இந்தியாவை சேர்ந்தவன் , சிந்து ஆறு , இந்துஸ் பகுதி ,                                   சிந்து வடக்கிந்தியாவின் நீட்டிக்கப்பட்ட பகுதி . A         ...

'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 2

Image
  ' ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி . தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன் .   அத்தியாயம் – 2 ஸ்டைங்கஸ் – ன் பணிகள் – ஓர் ஆய்வு திரு . அப்துல் ஹக் எழுதிய ‘ தி ஸ்டேண்டர்ட் இங்கிலீஷ் டிக்‌ஷனரி' ஹிந்து மற்றும் ஹிந்துஸ்தானி குறித்த பொருளை கீழ்வருமாறு குறிப்பிடுகின்றனர் . “ வட இந்தியாவில் வசிப்பவர்கள் , இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் ஹிந்துஸ்தானின் ஹிந்து எனப்படுவர் . வடக்கு அல்லது இந்தியாவின் மேற்பகுதியில் இருப்பவர்கள் ஹிந்து , முஸ்லீம்களாக இருப்பின் அவர்கள் ஹிந்துஸ்தானின் முஸ்லீம் எனப்படுவர் .” மீண்டும் நாம் பேரா . ஸ்டைங்கஸ் எழுதிய ‘ பெர்சியன் இங்கிலீஷ் டிக்‌ஷனரி' 1930 பதிப்பின் பக்கம் 1513 – 14 - ஐ பார்க்கையில் அதில்   ஹிந்து என்ற வார்த்தை “ இந்தியா ” என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது . வேறெந்த இழிவான பொருளையும் இந்த ஹிந்து என்ற சொல் குறிப்பிடவில்லை . அரேபியாவின் வெகு மக்களிடையே புழங்கும் சொல்லின் பொருளுக்கும் , இந்தியாவில் வாழும் ஹிந்துக்களுக்கும் எந்தவகையிலும் அந்த பொருள் பொருந்தாது . இவ்விரு 1513 – 14 பக்கங்களில் இருந்து...

ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 1

Image
    ' ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்   ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி . தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன் .   அத்தியாயம் 1   பின்னணி   'ஹிந்து' என்ற வார்த்தைக்கு எதிரான தங்கள் பார்வைகளை ஹிந்துக்களே காலகாலமாக , அதாவது நம்மை பிரிட்டிஷார்   ஆட்சி செய்த காலத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை 'ஹிந்து' என்று அழைப்பதையே வெட்கப்படும் ஒன்றாக கருதியும் வருகின்றனர். பேரா. ஸ்டைங்கஸ் அவர்களின் பெர்ஸியன் ஆங்கில அகராதியில் இழிவு படுத்தும் முறையில் சேர்க்கப்பட்ட அந்த அர்த்தத்தையே , நூற்றாண்டுகளுக்கு முன் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷாரால்   ஹிந்துக்களின் பெருமையை குலைக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது. உண்மையை சொல்வதெனில் ஹிந்து என்ற வார்த்தை ஹிந்துஸ்தானில் கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்துள்ளது. இந்தியர்களை காலம் கடந்த காலத்திலிருந்தே ஹிந்து என்றே அழைத்திருக்கின்றனர். ஹசரத் அமீர் ஹம்ஸாவின் கொலைக்கான கருவியாக செயல்பட்ட அரேபிய பெண்மணியை 'ஹிந்து' என்ற பெயரில் பெர்சியன் மொழி குறிப்பிடுகிறது. அவள் ஒ...

'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்

Image
 ' ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்  ஆங்கில மூலம் :  ப்ரேம்நாத் மகாஜனி தமிழாக்கம் :  சரஸ்வதி சுவாமிநாதன் ஆங்கில மூல வெளியீடு :  சகோதரி நிவேதிதா அகாடமி. விரைவில் ....