ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 1

 

 'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்

 


ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி.

தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்.

 

அத்தியாயம் 1

 

பின்னணி

 

'ஹிந்து' என்ற வார்த்தைக்கு எதிரான தங்கள் பார்வைகளை ஹிந்துக்களே காலகாலமாக , அதாவது நம்மை பிரிட்டிஷார்  ஆட்சி செய்த காலத்திலிருந்தே வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை 'ஹிந்து' என்று அழைப்பதையே வெட்கப்படும் ஒன்றாக கருதியும் வருகின்றனர். பேரா. ஸ்டைங்கஸ் அவர்களின் பெர்ஸியன் ஆங்கில அகராதியில் இழிவு படுத்தும் முறையில் சேர்க்கப்பட்ட அந்த அர்த்தத்தையே , நூற்றாண்டுகளுக்கு முன் நம்மை ஆட்சி செய்த பிரிட்டிஷாரால்  ஹிந்துக்களின் பெருமையை குலைக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டது. உண்மையை சொல்வதெனில் ஹிந்து என்ற வார்த்தை ஹிந்துஸ்தானில் கி.மு. 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே புழக்கத்தில் இருந்துள்ளது. இந்தியர்களை காலம் கடந்த காலத்திலிருந்தே ஹிந்து என்றே அழைத்திருக்கின்றனர்.

ஹசரத் அமீர் ஹம்ஸாவின் கொலைக்கான கருவியாக செயல்பட்ட அரேபிய பெண்மணியை 'ஹிந்து' என்ற பெயரில் பெர்சியன் மொழி குறிப்பிடுகிறது. அவள் ஒரு அரேபியாவின் தீவிரவாதியாக அக்காலத்தில் இருந்திருக்கிறாள். அவளது பெயரை பெர்சிய இலக்கியங்கள் இணைத்து குறிப்பிடுகையில், " ஒரு திருடன், ஒரு ஆயுதம் தாங்கிய கொள்ளைக்காரன், ஒரு பணியாள், ஒரு அடிமை, ஒரு சேவையாள், ஒரு கருப்பன், ஒரு குழுவினர், சில இடங்களில் அன்பானவர்" என்றும் குறிப்பிட்டிருக்கும் அதே அகராதியில் " இந்தியர்கள் " என்ற பொருளும் தந்திருக்கிறது.

அலகாபாத்தை சேர்ந்த திரு. லாலா ராம் நாராயண் பினி மதோ அவர்கள் எழுதி வெளியிட்ட நூல் பெர்சியன் இலக்கியம் குறித்த ஆதாரபூர்வமான தரமான அகராதியாக கருதப்படும் லுகாட்டி பார்ஸி என்ற நூலில் பின்வரும் வார்த்தைகள் காணப்படுகின்றன அவை :-

 ஹிந்த், ஹிந்து, ஹிந்த்வாஸ் மற்றும் ஹிந்திஇந்த வார்த்தகைகள் அனைத்தும் எந்த அவதூறான பொருளில் இல்லை. அதில்ஹிந்து' என்ற வார்த்தைக்கு உள்ள பொருள்கள் கீழே தரப்பட்டுள்ளது.

ஹிந்த் இந்தியாவை சேர்ந்தவர்கள், ஹிந்த் என்ற புகழ் பெற்ற நாட்டை அல்லது ஹிந்துஸ்தான் , இந்தியன் என்பது இந்தியாவை சார்ந்தவர்கள் , இந்தியாவில் வசிப்பவர்கள்.”

பெர்ஸியாவின் அனைத்து புகழ்பெற்ற கவிஞர்கள் மற்றும் பண்டிதர்களான ஹபீஸ் ஷெராஸி, ஷயீக் சாதி, மௌலானா ரூமி மற்றும் ஹபீஸ் போன்றோர் இந்தியர்களையும், ஹிந்துக்களையும், ஹிந்துஸ்தானையும் மிக உயர்வாகவே கருதியிருக்கின்றனர். அவர்களும் தங்கள் படைப்புக்களில் எண்ணற்ற இடங்களில் ஹிந்து மற்றும் ஹிந்துஸ்தான் என்ற வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளனர்.

பெர்ஸியன் மொழி இந்திய மொழியல்ல என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு அயல்மொழியில் பயன்படுத்தப்படும் சொல்லின் பொருள் அந்தந்த நாட்டிற்குரியதேயன்றி மற்ற நாகரீகம் , வாழ்வியல் முறையும் மாறுபட்ட பிறநாட்டிற்கு பொருந்தாது. அது நம்மை கட்டுப்படுத்தவும் செய்யாது. இந்த உலகில் பலவிதமான மொழிகள் உள்ளன, அதன் பொருள் வெவ்வேறு நாடுகளில் பாதகமான, எதிர்மறையான பொருளை வழங்கக்கூடும். அது எந்தவகையிலும் அங்கே வசிக்கும் மக்களை கட்டுப்படுத்தாது.

நெப்போலியன் காலத்தில் அவனது தொடர் வெற்றியின் காரணமாக நெப்போலியன் அல்லது போனி என்ற அழைக்கப்பட்ட நெப்போலியன் மேற்கத்திய பிள்ளைகளுக்கு ஒரு பூச்சாண்டியாகவும், வன்முறையாளனாகவும் சித்தரிக்கப்பட்டிருந்தான். குழந்தைகள் ஏதேனும் குறும்புகள் செய்கையில் மேற்கத்திய பெற்றோர்கள், “ போனி வந்து தூக்கிட்டு போயிடுவான்.” என்று பயமுறுத்த பிள்ளைகளும் அமைதியாகிவிடும். ஆனால் அதேபோனிஎன்ற வார்த்தை பிரென்ச் குழந்தைகளுக்கு பயத்தை தராமல் அவர்களுக்கு உத்வேகத்தையும், துணிச்சலையும் தந்தது.

இங்கிலாந்தின் வரலாற்றில்இங்கிலாந்துஎன்ற சொல்லே மிகவும் கீழ்மையான சொல்லாகவே இங்கிலாந்தில் இருந்த காலகட்டம் என்று ஒன்று இருந்தது. நார்மன் வெற்றியாளர்களின் பார்வையில் பரஸ்பரம் உறுதி ஏற்கையில்நான் ஒரு ஆங்கிலேயானாக இருப்பேன்என்று கூறுவதே மன்னிக்க இயலாத குற்றமாக பார்க்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அவர்கள் தங்கள் ஆங்கிலத்தையோ, தங்கள் நிலத்தின் பெயரையோ புறக்கணிக்கவோ, அவமதிக்கவோ செய்யாமல் இருந்தனர். தங்கள் தேசமான இங்கிலாந்து மற்றும் இங்கிலீஷை, நார்மன்டி அல்லது நார்மன்ஸ் என்றோ கூறவில்லையே ?

ஹிந்துஸ்தானத்தை சேர்ந்த நாம் ஆங்கிலேயர்களை அங்கிரேஸ்என்ற பெயரில் இந்த முழு உலகமும் அவர்களை இங்கிலீஷ் அல்லது பிரிட்டிஷ் மக்கள் என்று அறிந்திருந்தபோதும் நாம் அழைத்ததை அவர்களும் எதிர்க்கவில்லை. இந்த சொல் அவர்களுக்கு எந்த அவமதிப்பை தராதமையால் , அவர்கள் அவர்களாகவே இருந்தனர்.

அதேப்போல்ஹிந்து' என்ற அரேபியாவின் பெண் அரேபிய மக்களுக்கு சிலகாலம் பயத்தை அளிப்பவளாக இருந்தாள். புனித தீர்க்கதரிசியான மொஹமத் அவர்களின் மாமனான ஹசரத் அமீர் ஹம்ஸா இந்த அரேபிய பெண்ணால் கொல்லப்பட்டார். அவள் அவனது இறந்த உடலில் இருந்து கல்லீரலை எடுத்து உகாத்ன் போர்க்களத்தில் விழுங்கினாள். அவள்ஹிந்தா' என்று அழைக்கப்பட்டாள். அக்காலத்தில் அவள் ஒரு கொடிய கூட்டத்திற்கு தலைவியாகவும் இருந்தமையால் அவளது பெயர் அரேபியாவில் பேசப்பட்டு பெர்சியன் மொழியும், இலக்கியங்களும் அதே பொருளினை சுமந்து கொண்டது.

பெர்சியன் வார்த்தைகளானஹிந்த்வானா, ஹிந்துசாத் மற்றும் ஹிந்த்குஷ்போன்ற வார்த்தைகளுக்கும் ஹிந்து என்ற வார்த்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை பெர்சியன் இலக்கியங்களும் தெளிவாக குறிப்பிட்டுள்ளன. அதேசமயம் , “ ஹிந்த், ஹிந்தி, ஹனூத், ஹிந்துஸ்தானி மற்றும்பிறவார்த்தைகளுக்கும் ஹிந்து என்ற வார்த்தைக்கும் தொடர்புகள் உண்டு. இது குறித்த பொருளானது பெர்சியன் மற்றும் அரேபிய இலக்கியங்களெங்கும் விரவிக்கிடக்கின்றன.

ஹிந்துஸ்தான் ஒரு புராதனமான ஒரு உலகநாடு ஆகும். ஹிந்து நாடே இன்றிருப்பதில் மிக பழமையான நாடாகும். பெரும் நாகரீகமாக கருதப்படும் கிரேக்கம், எகிப்திய, சிரியா அல்லது பெர்சியா போன்றவைகளுக்கும் முன்பே தோன்றிய நாகரீகம் ஹிந்துக்கள் உடையது. முந்தையகால ஆவணங்களுக்கு நாம் ஜென்ட் அவெஸ்தான் நாகரீகத்திற்கு கி.மு. 5000 க்கும், மற்றும் மகாபாரதம் போன்றவற்றிற்கு கி.மு. 3000 க்கும் அல்லது ஆரிய நாகரீகத்திற்கும் நாம் போக வேண்டும். நாகரீகம் என்பது ஏதோவொரு இரவில் தோன்றியதல்ல, பல ஆயிர ஆண்டுகால வளர்ச்சியின் நீட்சியே இது. இந்தூஷ் சமவெளி நாகரீகம் ( கி.மு.2500 ) என்பது ஹஃப்டா ஹிந்துஅல்லதுசஃப்டா சிந்து”. இந்தியர்கள் சிந்துஸ்என்றழைக்கப்படுவதற்கு பதிலாகஇந்துஸ்என்றழைக்கப்பட்ட அவர்கள் இந்தியாவில் தங்கியவர்கள் சரியாகஸி' என்பதை உச்சரிக்க இயலாமல் இருந்தனர். பட்டான்கள், முகல்கள், ஆப்கான்கள், அல்லது ஆங்கிலேயர்களுக்கு ஹிந்துஎன்ற வார்த்தையோடு எந்த தொடர்பும் இல்லை.

மனித பரிணாம வளர்ச்சி, நாகரீகம் போன்றவற்றிலும் இந்த சமூகத்தின் கலாச்சாரங்களிலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் தோன்றும் முன்னரே ஏற்பட்ட தாக்கங்களின் வேர்களையும் நாம் இங்கே புறக்கணிக்க இயலாது. நமது பாரம்பரியம், குறித்து பேச இது சரியான தருணமல்ல. போதிய அளவு ஹிந்து மற்றும் ஹிந்துயிசம் குறித்து போதிய அளவிற்கு பல அறிஞர்கள் மூலம் கூறப்பட்டும், எழுதப்பட்டும் விட்டது. எனவே இந்த ஹிந்து' என்ற வார்த்தை குறித்து அவமதிப்பான முறையில் கூறல் தேவையற்ற குழப்பத்தையே தரும். இங்கே இரண்டு தவறுகள். ஒன்று ஹிந்து' என்ற வார்த்தையை தவறாக பொருள் கூறல், இன்னொன்று அந்த வார்த்தையே இல்லை என்று கூறுதல். டாக்டர். வின்டர்நிட்ஸ் என்ற புகழ்பெற்ற ஜெர்மன் உளவியலாளர் தனது புத்தமதம் மற்றும் இந்துமதம் குறித்து ஒப்பீட்டாய்வு செய்து தனது இந்திய இலக்கிய வரலாறு ( History of Indian Literature – By Dr. Wintetnitz ) என்ற நூலில் எழுதியுள்ளார்.

பக்கம் 230 ல் அவர் கூறுகையில், “ இந்து கடவுளர்களை குறிப்பாக சிவ தத்துவம், புத்தர் மற்றும் போதிசத்துவர் போன்றவை ஒன்றோடொன்று தொடர்புடையது. போதிசத்துவர் என்று உருவான புதிய இலட்சியம், புத்தரை வழிபடும் புத்த பக்தி இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் இணைந்து மகாயானம் என்பதின் பிரபல்யமான பக்கமாக ஆனது. இந்தப்பக்கம் ஹீனயானத்தில் ஏற்கனவே இருப்பினும் ஹிந்துயிசத்தின் தாக்கத்தினால் வளர்ச்சியைக் கண்டதைப் போலவே , மகாயானத்தின் தத்துவ பக்கம் என்பது ஹீனயானம் மற்றும் ஹிந்து தத்துவங்களின் நீட்சியே ஆகும்.”

பக்கம் 387 ல். அவர் கூறுகையில், “ தார்னிஸ் ( கணபதி தார்னி என்பது சைவ கடவுள் கணபதியை பற்றிய உரை ) புத்தமதம் இந்தியாவில் துவங்கிய காலத்தில் இருந்த ஒன்றாகும். காலப்போக்கில் அதுவும் ஹிந்துமதத்தோடு கலந்து போனது.”

பக்கம் 399 ல். மேலும் டாக்டர். வின்டர்நிட்ஸ் கூறுகையில் , “ 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டு வரை பௌத்தர்களின் தந்த்ரா சைவ தந்த்ராவின் செல்வாக்கின் கீழே இருந்தது பின்னர் அது முற்றிலுமாக அழிந்து ஹிந்துமதத்தோடு கலந்து போனது.”

மீண்டும் பக்கம் 401 -ல் அவர் எழுதுகையில், “ பிற்காலத்தில் ( கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் ) பௌத்தர்களால் ஹிந்து தந்த்ராவும் தாக்கத்திற்குள்ளானது. ருத்ரயமாலா மற்றும் பிரம்மயமாலா போன்ற வசிட்டரின் தந்த்ரா முயற்சிகளின் மூலம் அவரால் தன் முன் பார்வதிதேவியை தோன்ற செய்ய இயலவில்லை.”

முஸ்லீம் நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், அரேபியா மற்றும் இன்னும்பிறவையும் இந்திய மக்களைஹிந்திஎன்றே அவர்களின் நிறம், சாதி, மதம், சமய பாகுபாடுகள் கடந்து அழைப்பதோடு இந்தியாவை ஹிந்த்என்கின்றன.

கிரேக்க மொழியில்எச்” ( H ) என்பதன் உச்சரிப்பு” ( I ) என மாறியதன் காரணமாக அவர்கள் எங்களைஇந்தோ “ , “இந்த்அல்லதுஇந்தியாஎன்றழைத்தனர்.

அமெரிக்கர்கள் இன்றும் இந்தியர்களைஹிந்துஎன்றே அழைக்கின்றனர். ஆங்கிலேயர்கள் நம்மை இந்தியர்கள் என்றும் , நமது நாட்டை இந்தியா என்றே அழைக்கின்றனர்.

மேற்கூறப்பட்ட தரவுகள்ஹிந்துஎன்ற வார்த்தை சந்தேகத்திற்கு இடமின்றி அலெக்சாண்டர் வருகைக்கு முன்னரே இங்கிருந்த ஒன்று என்பது உறுதிபடுத்துகிறது. சில குழுக்கள் கூறுவதைப்போல் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களோ , அல்லது மொகலாயர்கள் அரசாண்ட காலத்திலோ நம்மீது திணிக்கப்பட்ட சொல் ஹிந்துஎன்பதல்ல என்பது தெளிவு. 

நமது நாட்டின் புராதனமான பெயர் பாரத் அல்லது ஆர்யவர்தா, ஆனால் கிரேக்க நாகரிகத்தின் தாக்கத்தினால் இந்த நாடு இந்தியா என்று அறியப்பட்டது. கிரேக்க.மொழியின் உச்சரிப்பின் குறைபாடுகளால் சிந்துஎன்பதுஇந்துஎன உச்சரிக்கப்பட்டது. இன்னொரு தெளிவான தரவாக நாம் கருதக்கூடியது கிரேக்க பயணியான மெகஸ்தனிஸ் அவர்களின் நூலில் இந்திகா ( Indika ) என்று கி.மு. 302 ல் அவர் குறிப்பிட்டிருக்கிறார். “சிந்திகாஎன்பதன் மருவிய சொல்லே இந்திகாஇவ்வாறே சிந்து ஆறு பாயும் பாரத் ம் இந்தியாவானது. இது நமது நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்த கிரேக்க தாக்கத்தினால் விளைந்த மாற்றமாகும்.

மூலம் தேடும் பயணம் தொடரும்....

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்