'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 3

                                 

                                        'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம்


ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி.

தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன்.

அத்தியாயம் – 3

தி என்சைக்ளோபிடியா பிரிட்டானிகா

தி என்சைக்ளோபிடியா பிரிட்டானிகா வை மேற்கோள் காட்டும் முன் சில புகழ்பெற்ற அகராதிகளான வெப்ஸ்டர், கேம்ப்ரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்ட் இந்த ஹிந்து' என்ற வார்த்தை குறித்து என்ன சொல்லியிருக்கின்றன என்று பார்ப்போம்.

ஹிந்து           - இந்தியன், இந்தியாவை சேர்ந்தவன், சிந்து ஆறு , இந்துஸ் பகுதி,     

                            சிந்து வடக்கிந்தியாவின் நீட்டிக்கப்பட்ட பகுதி.

A                      -   வடக்கிந்தியாவின் ஆர்யன், ஹிந்துயிசத்தை பின்பற்றுபவர்கள்.

B.                      ஹிந்து குணநலன்களை கொண்டவர் , ஹிந்துஸ்தானை

                             பூர்விகமாக கொண்டவர்கள், ஹிந்துயிசத்தை சார்ந்தவர்கள்.

என்சைக்ளோபிடியாவின் தொகுதி – II ல் இருந்து பக்கம் 569 முதல் 574 வரையிலான இந்து என்ற வரையறை இங்கே தரப்பட்டுள்ளது.

ஹிந்த்( Hind )      - 1. இந்தோஆர்யன் (பிராகிருத்)க்கு இடைப்பட்ட மொழி.

                                   2. இந்தோ ஆர்யன் பாலமாக இருந்த மொழி வடக்கு மற்றும்

                                        தெற்கு பகுதியில் பேசப்பட்ட மொழி.

ஹிந்த் ( Hindki )     -  ஆப்கானிஸ்தானில் வசித்த காத்ரி வகுப்பு ஹிந்துக்களின் பெயர்.

ஹிந்தோஸ்தன்   -  இது ஒரு பெர்சிய வார்த்தை. நவீன பெர்சியர்கள்

( Hindostan )                இதனை ஹிந்துஸ்தான் என்று உச்சரிக்கின்றனர். இதன்

                                       பொருள் இந்துக்களின் நாடு.

                                       ஹிந்த் என்கிற வார்த்தை இடைக்கால பெர்சியன்

                                       வார்த்தையான ஹிந்தோஎன்பது சமஸ்கிருத சிந்தாவி ஆகும்.

                                       சிந்து அல்லது ஹிந்துஸ் குடியிருப்பாளர் ஆவா்.

ஜான் B. கில்கிறிஸ்ட் பெர்சிய மொழி சிறப்பை தனது நண்பர்களுக்கும், பயணிகளுக்கும் கல்கத்தாவில் அறிமுகப்படுத்திய இவர். ஹிந்தூஸ்தான் என்பதன் உச்சரிப்பே ஹிந்துஸ்தான் என்று மருவியது என்கிறார்.

இந்த ஹிந்திஎன்ற வார்த்தை இந்திய வார்த்தை அல்ல. பெர்சியன் ஹிந்த்” ( அவெஸ்தா ஹிந்து, சமஸ்கிருதம், சிந்து, இந்துஸ் ) என்ற வார்த்தையிலிருந்து தோன்றியதே ஆகும் என்றும், ஹிந்தி என்பதன் பொருள் இந்துமதம் சார்ந்த, இந்தியாவை சார்ந்ததை குறிப்பதாகும்.

மேலும் ஹிந்து மற்றும் சிந்துவார்த்தையின் விளக்கம் பற்றி அறிய சர் சார்லஸ் லயால் எழுதிய ஹிந்துஸ்தானி மொழி” ( Hindustani language ) என்ற நூலை நான் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

இந்த நூல் தெளிவாக சிந்துஎன்ற வார்த்தையே ஹிந்துவாக மாறியது என குறிப்பிடுகிறது. ஆனால் மேற்கத்தியர்கள் இந்த வார்த்தைக்கு தவறான அர்த்தங்களை கூறி மக்களிடம் குழப்பங்களை விளைவித்தனர். மேலும் அதற்கான தவறான சான்றுகளையும், விளக்கங்களையும் கூறி அதனையும் பரப்பினர். “ஹிந்துஎன்ற வார்த்தை பெர்சியர்கள், மொகலாயர்கள், பட்டான்கள் அல்லது ஆங்கிலேயர்களாலோ அறிமுகப்படுத்தப்பட்ட வார்த்தையன்று, இந்த அனைவரின் வருகைக்கும் முன்னரே இந்தியாவில் இருந்த வார்த்தை இதுவாகும். இந்துக்கள் தங்களை ஹிந்துஎன்று அழைப்பதை மறுத்தமைக்கான ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ வருகைக்கு முன்னரே அவெஸ்தான் நாகரீகத்தின் வழித்தோன்றலாக ஹிந்துக்கள் இங்கே இருந்தனர்.

மூலம் தேடும் பயணம் தொடரும்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. தற்போதைய சூழலில் தேவையான ஒன்று.., தொடருங்கள்.வாழ்த்துகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்