யோகிராம்சுரத்குமார் "அவன் அருளாலே அவன் தாள் பற்றி..." என்பது மிக சத்தியமான வார்த்தை. பிரம்மா கோவில் போகணும் என்று சொல்ல தெரியும் என்ற டாக்ஸி டிரைவர் சமயபுரம் சென்று "மிஸ் பண்ணீட்டேங்க முடிச்சிட்டு வாங்க போயிடலாம் "என்று சொல்ல நான், சரஸ்வதி ,ராம்குமார் , சசிதரன் நால்வரும் சமயபுரம் சென்று திருப்பட்டூர் வர நடை சார்த்தப்பட்டது. மணி 12.10 pm. ஸ்ரீரங்கம் திரும்பினோம் இது சென்ற வருட சித்திரை மாதம. ஏப்ரல் 30 இரவு ஏழு மணி. எக்மோர் வந்துடு...சசி...சிறுகனூர் எறங்கிட்டு அப்புறம் திருச்சி போகலாம் டிராவல்ஸ் தானே நிறுத்த சொல்லலாம். சரி ஆபிஸ்ல் இருந்து கிளம்பிட்டேன் இது சசி. இரவு எட்டு மணி. தங்கச்சிக்கு பிரஷர் அதிகமாயிடுச்சு. அதனால் நாளைக்கு சிசேரியன். ஆஸ்ப்பிட்டல் போகணும் சாரி என்னால் வரமுடியாது மீண்டும் சசி. தனியே துவங்கியது என் திருப்பட்டூர் பயணம். இது என்ன திருப்பட்டூர். யார் சொன்னார்கள். அய்யன் பாலகுமாரன் அறிமுகம் மூலம் நான். அறிந்தவர். ராம்ஜி வெங்கட்ராமன் அவரின் நூல் தந்த அறிமுகம் திருப்பட்டூர். மே 1- 2015. காலை 5.50. சிறுகனூர் வெளியே வாங்க என்று ...
Comments
Post a Comment