'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் - பகுதி - 4

'ஹிந்து' என்ற வார்த்தையின் மூலம் ஆங்கில மூலம் : பிரேம்நாத் மகாஜனி . தமிழாக்கம் : சரஸ்வதி சுவாமிநாதன் . அத்தியாயம் – 4 எதனால் ஹிந்து ? வரலாற்று ஆய்வாளர்கள் ஹிந்து நாகரீகத்தின் தடங்களை கலாச்சாரத்தை மற்றும் மதத்தை இந்தியாவை சூழ்ந்திருக்கும் நாடுகளான இலங்கை , பர்மா , மேற்காசியா , சைனா , ஜப்பான் , கிழக்கிந்திய நாடுகள் , இந்தோ - சீனா , போர்னியோ , இன்னும் பிறவற்றிலும் ஆராய்ந்தனர் . ஐரோப்பிய வரலாற்றாய்வாளர்களின் கூற்றுபடி இந்தியர்களின் இந்த நாடுகளுடனான தொடர்பு கி . மு . 600 ல் இருந்தே இருப்பதாக அறியப்பட்டுள்ளது . ஆனால் மகாபாரதப்படி ( கி . மு . 3000 ) முன்பிருந்தே தொடர்புகள் இருக்க வாய்ப்புண்டு என்பதையும் அறிகிறோம் . பாரத் ( இந்தியா ) என்பதே மஹாபாரதம் என்று அறியப்பட்டிருக்கிறது . இதன் எல்லைகள் இன்றைய இந்தியாவைவிட கிழக்கு , மேற்கு , வடக்கு மற்றும் தெற்கு திசைகளில் மிகவும் பரந்து விரிந்து கி...